Published on Dec 24, 2024
Current Affairs
குளிர்காலக் கூட்டத்தொடர் 2024
குளிர்காலக் கூட்டத்தொடர் 2024
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளின் குளிர்காலக் கூட்டத் தொடரும் தேதி எதுவும் அறிவிக்கப் படாமல் ஒத்தி வைத்ததுடன் முடிவடைந்துள்ளது.
  • இந்தக் கூட்டத் தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா அனுசரிப்பு, மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகியவை இடம் பெற்றன.
  • "ஒரு தேசம் ஒரு தேர்தல்" திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக மேற் கொள்ளப் படும் அரசியலமைப்பு (129) திருத்த மசோதா, 2024 மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 போன்ற விவாதத்திற்குரிய மசோதாக்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. மக்களவையில் வெறும் நான்கு மசோதாக்களும், மாநிலங்களவையில் வெறும் மூன்று மசோதாக்களும் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இதில் மக்களவையின் செயல்பாட்டுத் திறன் 54.5% ஆகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத் திறன் 40% ஆகவும் இருந்தது. பட்டியலிடப்பட்ட 16 மசோதாக்களில், பாரதிய வாயுயான் விதேயக், 2024 என்ற ஒரே ஒரு மசோதா மட்டுமே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையின் முதல் ஆறு மாதங்களில் ஒரே ஒரு மசோதா மட்டுமே நிறைவேற்றப்ப ட்டது. கடந்த ஆறு மக்களவைகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த செயல்திறன் கொண்டதாகும். மாநிலங்களவையில், மொத்தம் 19 நாட்களில் 15 நாட்கள் அளவிலான கேள்வி நேரம் செயல்படுத்தப்படவில்லை. மக்களவையில், 20 நாட்களுள் 12 நாட்களில் 10 நிமிடங்களுக்கு மேல் கேள்வி நேரம் செயல்படுத்தப்படவில்லை. * மக்களவையில் தனிநபர் மசோதா குறித்த விவாதங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை மற்றும் மாநிலங்களவையில் ஒரு தீர்மானம் மட்டுமே விவாதிக்கப்பட்டது.