Published on Dec 17, 2024
Current Affairs
குறைபாடுகள் குறித்து CAG அறிக்கை
குறைபாடுகள் குறித்து CAG அறிக்கை
  • இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பானது, தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அறிவிப்பின் அமலாக்கத்தில் உள்ள குறிப்பிடத்தக்க தாமதங்கள், மீறல்கள் மற்றும் குறைபாடுகளை எடுத்துரைத்துள்ளது. 
  • 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆனது (TNSCZMA), 175 திட்டங்களில் 114 திட்டங்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிசீலனைக்குப் பரிந்துரைக்காமலேயே அவற்றிற்கு நேரடியாக ஒப்புதல் அளித்துள்ளது.
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து கட்டாயமாக தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் கழிவுநீர் வெளியேற்றம் செய்வது தொடர்பான சுமார் 23 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • சென்னை, செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் எதுவும் மேற்கொள்ள அனுமதியில்லா மண்டலத்தில் 90 அங்கீகரிக்கப்படாத கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து கண்டறியப்பட்டன. மேலும், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (HR&CE) ஆனது, தணிக்கைக்காக தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகத்திடம் எந்தப் பதிவுகளையும் அளிக்க இல்லை. ஆனால் HR & CE துறையின்படி, சமய நிறுவனங்கள் தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்வதற்கு CAGக்கு அதிகாரம் இல்லை.
  • CAG தணிக்கையின் வரம்பு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து வழங்கப் படும் நிதிக்குள் மட்டுமே அமைய வேண்டும். கடமைகள், அதிகாரங்கள் மற்றும் பணி நிபந்தனைகள் (DPC) என்ற சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் அரசாங்க மனிதவள மற்றும் அறநிலையத் துறையால் வழங்கப் பட்ட மானியங்கள் தனியாக தணிக்கை செய்யப்படலாம்.