Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Oct 14, 2024
Current Affairs
கருவிழித் தொற்றுப் பாதிப்பு இல்லாத இந்தியா
கருவிழித் தொற்றுப் பாதிப்பு இல்லாத இந்தியா
  • இந்தியாவானது கருவிழித் தொற்றுப் பாதிப்பினை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனை என்பதில்லிருந்து நீக்கியதன் மூலம், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாக மாறியுள்ளது.
  • கருவிழித் தொற்றுப் பாதிப்பு (ட்ரக்கோமா) என்பது க்ளமிடியா ட்ரக்கோமாடிஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் அதிகத் தொற்றுத்திறன் மிக்க பாக்டீரியக் கண் தொற்று ஆகும்.
  • இது ஒரு காலத்தில் இந்தியாவில், குறிப்பாக மோசமான சுற்றுச்சூழல் நிலைமைகளில் வாழும் பின்தங்கியச் சமூகங்களில் ஏற்பட்ட பார்வை இழப்பிற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது. ட்ரக்கோமாவினை ஒழிப்பதற்கான இந்தியாவின் பணிகள் ஆனது 1963 ஆம் ஆண்டில் தேசியக் கருவிழித் தொற்றுப் பாதிப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொடக்கத்துடன் தொடங்கியது. 1971 ஆம் ஆண்டில், கருவிழித் தொற்றுப் பாதிப்பினால் ஏற்பட்ட பார்வை இழப்பு 5% ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, உலகளவில் சுமார் 150 மில்லியன் மக்கள் கருவிழித் தொற்றுப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.