- இந்தியத் தரநிலைகள் வாரியம் (BIS) ஆனது, கியூப்சாட் எனப்படுகின்ற ஒரு சிறிய ரக செயற்கைக்கோள்களுக்கான உலகளாவியத் தரநிலையை ஏற்றுக் கொண்டுள்ளது.
- ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் OPAL ஆய்வுத் திட்டத்திற்காக முதன்முதலில் உருவாக்கப்பட்ட கியூப்சாட் தரநிலையானது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
- அவை சீரான அளவீடுகள், குறைந்த வாயு வெளியேற்ற கட்டமைப்புகள், செயல்பாட்டு நிறுத்த விசைக் கருவிகள் மற்றும் தீவிரச் சூழ்நிலைகளுக்கானச் சோதனை (அதிர்வு, வெப்பம், அதிர்ச்சி) ஆகியவற்றைக் கட்டாயமாக்குகின்றன. இந்தியச் செயற்கைக்கோள் தொடர்பு சந்தையானது, 2022 ஆம் ஆண்டில் 1.6 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது.இது 2023 முதல் 2030 ஆம் ஆண்டு வரையில் 11.75% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக உள்ளது என்ற ஒரு நிலையில் இது உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் சுமார் 2 முதல் 3% பங்கினை அளிக்கிறது.
- 2040 ஆம் ஆண்டில் இது 100 பில்லியன் டாலர்களை எட்டும் என அரசு எதிர்பார்க்கிறது.