Published on Oct 2, 2024
Current Affairs
கனிமப் பாதுகாப்பு நிதியளிப்பு வலையமைப்பு
கனிமப் பாதுகாப்பு நிதியளிப்பு வலையமைப்பு
  • அமெரிக்கா தலைமையிலான கனிமப் பாதுகாப்பு நிதியளிப்பு வலையமைப்பில் இந்தியா இணைந்துள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியம் மற்றும் ஐரோப்பியப் பகுதியில் இருந்து இந்த அமைப்பில் பங்கேற்கும் நிறுவனங்களிடையே "ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றம் மற்றும் இணை நிதியுதவியை மேம்படுத்துதல்" ஆகியவற்றை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வலையமைப்பு ஆனது 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் நிறுவப்பட்ட ஒரு கட்டமைப்பான கனிமப் பாதுகாப்பு கூட்டாண்மையின் (MSP) சமீபத்திய முன்னெடுப்பு ஆகும். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா இந்தக் கூட்டாண்மையில் சேர்க்கப்பட்டது.  
  • இந்த MSP குழுவானது கோபால்ட், நிக்கல், லித்தியம் மற்றும் 17 "அருமண்" தாதுக்கள் போன்ற கனிமங்களின் விநியோகச் சங்கிலிகளில் கவனம் செலுத்துகிறது.