H5N1 வகை பறவைக் காய்ச்சலானது ஓராண்டில் சுமார் 17,000 கடல் யானைகள் உயிரிழப்பிற்கு வழிவகுத்தது. * இது 2023 ஆம் ஆண்டில் 95 சதவீத கடல் யானைக் குட்டிகளை அழித்து விட்டது.
இந்த வைரஸ் ஆனது 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பெரு மற்றும் சிலி நாட்டுக் கடற்கரைகளில் பரவியது. இது கடற்பன்றி, ஓங்கில்கள் மற்றும் பிற கடல் வாழ் பாலூட்டிகளால் பரவுகிறது.
இந்தத் தொற்று ஆனது, குறிப்பாக அர்ஜென்டினா நாட்டின் படகோனியாவில் இனப் பெருக்கம் செய்யும் உயிரினங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
H5N1 என்பது பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் பாதிக்கும் ஒரு மிகக் கடுமையான வைரஸ் தொற்று ஆகும்.