Published on Dec 12, 2024
Current Affairs
கடலடிக் கம்பிவடங்களின் தாங்குந் திறன் தொடர்பான சர்வதேச ஆலோசனைக் குழு
கடலடிக் கம்பிவடங்களின் தாங்குந் திறன் தொடர்பான சர்வதேச ஆலோசனைக் குழு
  • சர்வதேச கம்பிவடங்கள் பாதுகாப்புக் குழு (ICPC) ஆனது, கடலடிக் கம்பிவடங்களின் தாங்குந் திறன் தொடர்பான சர்வதேச ஆலோசனைக் குழுவை உருவாக்கியுள்ளது.
  • பழமையான உள்கட்டமைப்பு, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சார்ந்த அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய கம்பி வட நிறுவல் அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதனை இந்த அமைப்பு நோக்கமாக உள்ளதுகொண்டுள்ளது. 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆலோசனைக் குழுவில் அமைச்சர்கள், ஒழுங்கு முறைத் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • மும்பை, சென்னை, கொச்சி, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள 14 தரையிணைப்புக் கட்டுப்பாட்டு நிலையங்களில் சுமார் 17 சர்வதேச கடலடிக் கம்பி வடங்களை இந்தியா கொண்டுள்ளது.