Published on Dec 21, 2024
Current Affairs
காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான UNGA தீர்மானம்
காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான UNGA தீர்மானம்
  • காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக் கோரும் தீர்மானங்களுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் தீர்மானமானது இந்தியா உட்பட 158 நாடுகளின் ஆதரவு வாக்குகளுடன் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்ற நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதிலிருந்து 13 நாடுகள் விலகிக் கொண்டதோடு ஒன்பது நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன. ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான அமைப்பின் (UNRWA) பணிக்கு இது ஆதரவு தெரிவித்துள்ளது.
  •  கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தத் தீர்மானம் மீது வாக்களிப்பதில் இருந்து விலகிய ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியன முதல்முறையாக காசா போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.