Published on Nov 28, 2024
Current Affairs
ஒரு சுகாதாரம் மற்றும் ஒரு பருவநிலை மையம் தமிழ்நாடு
ஒரு சுகாதாரம் மற்றும் ஒரு பருவநிலை மையம் தமிழ்நாடு
  • சுகாதாரத் துறையின் கீழ் 'ஒரு சுகாதாரம் மற்றும் ஒரு பருவநிலை மையத்தினை' அமைப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் அதிகரித்து வரும் வெப்பநிலை, காரணி மூலம் நோய் பரவல் அதிகரித்தல், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் மற்றும் கடலோரப் பாதிப்பு போன்றப் பிராந்தியம் சார்ந்த சவால்களை எதிர் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மையம் ஆனது, பருவநிலை சூழ்நிலைகளின் அடிப்படையில் நோய்ப் பாதிப்பு போக்குகளைக் கணிப்பதற்காக வேண்டி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாதிரிகளை உருவாக்கும்.
  • இது பாதிக்கப்படக்கூடியச் சமூகங்களை மையமாகக் கொண்டு, பருவநிலையினால் ஏற்படக்கூடிய நோய்களை கண்காணிக்க மாநில அளவிலான ஒரு தரவுத் தளத்தினை உருவாக்கி புதுப்பிக்கும்.
  • இது சுகாதார அபாயங்கள் மற்றும் நோய்களை ஆய்வு செய்வதற்காக என்று விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும்.