Published on Aug 20, 2024
Current Affairs
ஐக்கிய நாடுகள் சபையின் இணைய வெளிக் குற்றங்கள் தொடர்பான ஒப்பந்தம்
ஐக்கிய நாடுகள் சபையின் இணைய வெளிக் குற்றங்கள் தொடர்பான ஒப்பந்தம்
  • கடந்த மூன்று ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இணைய வெளிக் குற்றங்கள் தொடர்பான உடன்படிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.இது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி போன்ற இணைய வெளிக் குற்றங்களை மிகவும் திறன் மிக்க முறையிலும் மிகவும் தீவிரமாகவும் தடுப்பதையும் அதனை எதிர்த்துப் போராடுவதையும்" நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதன்முறையாக, உலகளவிலான அளவில் இணைய வெளிக் குற்றங்கள் மற்றும் தரவு அணுகலைச் செயல்படுத்தும் சட்டக் கட்டமைப்பை இது முன்மொழிகிறது.
  • இணைய வெளிக் குற்றங்களிலிருந்து சமூகத்தைப் பாதுக்காப்பதற்காக வேண்டி இது "உலகளாவிய குற்றவியல் நீதிக் கொள்கையை" நிறுவுகிறது.
  • மக்கள் அணுக முடியாத தகவல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்பை மீறும் செயல் முறையினை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை அமல்படுத்துமாறு அரசுகளுக்கு இது அழைப்பு விடுக்கிறது.
  • எனினும் 40 உறுப்பினர் நாடுகள் இந்த உடன்படிக்கையினை அங்கீகரித்தப் பிறகே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.