Published on Sep 2, 2024
Current Affairs
எழுத்தறிவு மற்றும் முழு அளவிலான எழுத்தறிவு வரையறை
எழுத்தறிவு மற்றும் முழு அளவிலான எழுத்தறிவு வரையறை
  • 2022-23 ஆம் நிதியாண்டு முதல் 2026-27 ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டு கால கட்டத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறும் புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம் (NILP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்தத் திட்டம் ஆனது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 5.00 கோடி எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கல்வி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக, கல்வி அமைச்சகம் (MoE) ஆனது 'எழுத்தறிவு' மற்றும் 'முழு அளவிலான எழுத்தறிவு' அடைவதன் அர்த்தம் யாது என்பதை வரையறுத்துள்ளது. கல்வியறிவு (எழுத்தறிவு) என்பது படிக்க, எழுத மற்றும் புரிந்து கொண்டு கணக்கிடும் திறன் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
  • இதில் எண்ணிம கல்வியறிவு, நிதியியல் கல்வியறிவு போன்ற முக்கியமான வாழ்க்கைத் திறன்களை அடையாளம் கண்டு, புரிந்து கொள்வது, விளக்குவது மற்றும் உருவாக்குவது ஆகியவை அடங்கும். முழு அளவிலான கல்வியறிவு என்பது 100% கல்வியறிவிற்குச் சமமானதாக கருதப்பட வேண்டும். மாநிலம்/ஒன்றியப் பிரதேசத்தில் 95% கல்வியறிவு நிலையினை அடைவது, முழு கல்வி அறிவிற்குச் சமமாக கருதப்படலாம்.