Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Nov 14, 2024
Current Affairs
ஊரக மேம்பாட்டுத் துறையின் சாதனைகள் 2024
ஊரக மேம்பாட்டுத் துறையின் சாதனைகள் 2024
  • எட்டு மாவட்டங்களில் எட்டு புதிய சமத்துவபுரங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் புதிய சமத்துவபுரங்களுக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தூய்மை பாரதம் என்ற திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ், 2021-22 ஆம் ஆண்டு முதல் 2.43 லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் 6,400க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 5,700க்கும் மேற்பட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற திட்டத்தின் கீழ், 2024-25 ஆம் ஆண்டில் மொத்தம் 3,500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சத்துக்கும் மிக அதிகமான கான்கிரீட் (பைஞ்சுதை) வீடுகள் கட்டமைக்கப்பட உள்ளன. கிராமப்புறங்களில் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதி முதல் அக்டோபர் 03 ஆம் தேதி வரை 3.30 லட்சம் வீடுகள் கட்டமைக்கப் பட்டுள்ளன.
  • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள சுமார் 7.15 லட்சம் வீடுகளுக்கு மொத்தம் 2,123 கோடி ரூபாய் செலவில் குடிநீர் வழங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.