Published on Sep 21, 2024
Current Affairs
உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்புக் குறியீடு 2024
உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்புக் குறியீடு 2024
  • சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியமானது (ITU) வெளியிட்ட 2024 ஆம் ஆண்டு உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்புக் குறியீட்டில் (GCI) இந்தியா முதல் அடுக்கு நிலைக்கு முன்னேறியுள்ளது.
  • இந்த அறிக்கையானது 46 நாடுகளை மொத்தம் ஐந்து அடுக்குகளில் மிக உயரிய நிலையான முதல் அடுக்கு நிலையில் தரவரிசைப்படுத்தியுள்ளது. இது ஐந்து இணையப் பாதுகாப்பு அம்சங்களிலும் வலுவான உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும் "முன்மாதிரியாக விளங்கும்" நாடுகளுக்காக என்று இந்த தரவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. இணைய வெளிப் பாதுகாப்பின் அடிப்படையில் பெரும்பாலான நாடுகள் "நிலைப் படுத்திக் கொண்டு வரும் நிலை" (அடுக்கு 3) அல்லது "பரிணமித்து வரும் நிலையில்" (அடுக்கு 4) உள்ளன.
  • இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) மற்றும் தனிநபர் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு மசோதா (2022) போன்ற வலுவான சட்ட நடவடிக்கைகள் உள்ளன.