- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தற்காலிகப் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த சுமார் 60 தளங்கள் இடம் பெற்று உள்ளன.
- ஒரு தற்காலிகப் பட்டியல் என்பது, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக பரிந்துரைக்கப் படுவதற்கு பரிசீலிக்க ஒவ்வோர் அரசினால் கோரப்படும் தளங்களின் பட்டியல் ஆகும்.
- சமீபத்தில் அசாமில் உள்ள 'மொய்தாம்ஸ்' எனப்படும் அஹோம் வம்சத்தின் மண்மேடு வடிவிலான புதைவிடத் தளமானது யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- இந்த தளம் ஆனது, 2014 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
- தற்போதைய நிலவரப்படி, 42 இந்தியத் தளங்கள் ஆனது உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.