Published on Dec 10, 2024
Current Affairs
உலகின் முதல் சுயமாக இயங்கும் செயற்கைக்கோள்
உலகின் முதல் சுயமாக இயங்கும் செயற்கைக்கோள்
  • உலகின் முதல் 'சுய இயக்க' செயற்கைக் கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 
  • இந்த செயற்கைக்கோள்கள் தரைக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் குறுக்கீடு எதுவும் இல்லாமல் தங்கள் இயக்கப் பாதைகளைத் தன்னிச்சையாகப் பேணுகின்ற அல்லது மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  •  அது செயல்பாட்டிற்கு வந்தவுடன், இந்தச் செயற்கைக்கோள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட, நாள் முழுவதும் எடுக்கப்படும், அனைத்து வானிலையிலும் எடுக்கப்படும் ரேடார் படங்களை வழங்கும். நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களைக் கண்காணித்தல், காடுகளை அழிப்பதைக் கண்காணித்தல், இராணுவக் கண்காணிப்பு ஆகியவற்றில் இது உதவும்.