* உமிழ்வு இடைவெளி அறிக்கை என்பது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்புத் திட்டத்தின் வருடாந்திர வெளியீடாகும்.
மிகவும் அதிகளவில் பசுமை இல்ல வாயுவினை வெளியிடும் ஆறு நாடுகள் ஆனது உலகளாவிய GHG உமிழ்வுகளில் 63% பங்கினை கொண்டுள்ளன. குறைந்த அளவு வளர்ச்சியடைந்த நாடுகளின் பங்கு 3% மட்டுமேயாகும். சீனா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது 4,140 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான (MtCO2e) உமிழ்வுடன் மொத்த GHG உமிழ்வில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் முந்தைய (1850-2022) CO₂ உமிழ்வுப் பதிவுகள் ஆனது சீனா (300Gt CO₂ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான) மற்றும் அமெரிக்கா (527 Gt CO2) ஆகிய நாடுகளை விட மிகக் குறைவு ஆகும் (83 Gt CO2).பசுமை இல்ல வாயு உமிழ்வு ஆனது, 2023 ஆம் ஆண்டில் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான 57 ஜிகாடன்கள் (Gt) என்ற புதிய உச்ச அளவிற்கு உயர்ந்துள்ளது (2022 ஆம் ஆண்டில் இருந்த அளவில் இருந்து 1.3% அதிகரிப்பு).
அடுத்த தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட உறுதிப்பாடுகளில், 2030 ஆம் ஆண்டில் 42% மற்றும் 2035 ஆம் ஆண்டில் 57% என்ற அளவில் வருடாந்திர பசுமை இல்ல வாயு உமிழ்வு குறைக்க உலக நாடுகள் கூட்டாக உறுதியளிக்க வேண்டும்.