Published on Nov 10, 2024
Current Affairs
'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழான நிதியுதவி அதிகரிப்பு
'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழான நிதியுதவி அதிகரிப்பு
  • தமிழக அரசானது, 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் வழங்கப் படும் நிதியுதவியை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக விரைவில் உயர்த்தஉள்ளது.
  •  இது சாலை விபத்துக்களில் காயம்பட்டவர்களுக்கு முதல் 48 மணிநேரத்திற்கு வழங்கப் படும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமாகும்.
  • இதுவரை மூன்று இலட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டம் பயனளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' திட்டத்திற்காக அரசாங்கம் இதுவரையில் 261.46 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது.