Published on Jun 11, 2024
Current Affairs
இந்தோ-பிரெஞ்சு TRISHNA திட்டம்
இந்தோ-பிரெஞ்சு TRISHNA திட்டம்
  • இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டின் விண்வெளி நிறுவனங்கள் மனிதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம், நீர் பயன்பாடு, பனி உருகுதல் போன்றவற்றின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக என்று தனித்துவமான செயற்கைக் கோளை உருவாக்கி வருகின்றன.இது 'TRISHNA' (உயர் தெளிவுத்திறன் கொண்ட இயற்கை வள மதிப்பீட்டிற்கான வெப்ப அகச்சிவப்பு ஆய்வு செயற்கைக்கோள்) என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
  • இது பூமியில் இருந்து 761 கி.மீ. உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
  • இது பூமியின் மேற்பரப்பு மற்றும் பல்வேறுச் சுற்றுச்சூழல் அளவுருக்கள் மற்றும் பல முரண்பாடுகளை உயர் தெளிவுத் திறனில் ஆய்வு செய்ய உதவும்.