Published on Nov 24, 2024
Current Affairs
இந்திரா காந்தி அமைதி பரிசு 2023
இந்திரா காந்தி அமைதி பரிசு 2023
  • 2023 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு ஆனது, மிகப்புகழ் வாய்ந்த செவ்வியல் பியானோ கலைஞரும் இசை நிகழ்ச்சி நெறியாளருமான டேனியல் பாரன்போம் மற்றும் பாலஸ்தீனிய அமைதி ஆர்வலர் அலி அபு அவ்வாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இசை மற்றும் கலாச்சார பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் மூலம் இந்த அமைதியை மேம்படுத்துவதில் பங்காற்றியதற்காக பாரன்போம்க்கு இந்தப் பரிசு வழங்கப் பட்டது.
  •  அவ்வாத் இஸ்ரேல் நாட்டு சிறையில் சிறிது காலம் கழித்த பிறகு அவர் தொடங்கிய ரூட்ஸ் என்ற ஒரு அமைப்பின் மூலமான பேச்சுவார்த்தைக்கான அவரது ஆதரவிற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது.