Published on Oct 27, 2024
Current Affairs
இந்திய ரூபாய் மதிப்பிலான வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதி
இந்திய ரூபாய் மதிப்பிலான வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதி
  • இந்திய அரசானது, மொரீஷியஸ் நாட்டு அரசுக்கு 487.60 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான ஒரு அனுமதியினை வழங்கியுள்ளது.
  • எந்தவொரு நாட்டிற்கும் இந்தியாவினால் வழங்கப்பட்ட முதல் ரூபாய் மதிப்பிலான வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதி இதுவாகும். இது இந்திய மேம்பாட்டு மற்றும் பொருளாதார உதவித் திட்டத்தின் (IDEAS) கீழ் திட்ட நிதியுதவிக்காக வழங்கப்படுகிறது.
  • IDEAS என்ற முன்னெடுப்பானது, சலுகைக் கடன்கள் மூலம் பங்குதார நாடுகளில் மேற் கொள்ளப் படும் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிக்கிறது. இந்தத் திட்டத்திற்கு பாரத் ஸ்டேட் வங்கி சலுகை அடிப்படையில் நிதியளிக்கும்.