Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Oct 17, 2024
Current Affairs
இந்தியாவில் வாய் புற்றுநோய்ப் பாதிப்பு
இந்தியாவில் வாய் புற்றுநோய்ப் பாதிப்பு
  • தெற்காசியாவில் புகையற்ற புகையிலை (மெல்லுதல், உறிஞ்சுதல் அல்லது முகர்தல்) மற்றும் பாக்கு (வெற்றிலைப் பாக்கு என்றும் அழைக்கப்படுகிறது) ஆகியவற்றினால் ஏற்படும் வாய்வழிப் புற்றுநோய்களின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 1,20,200 பாதிப்புகளில் சுமார் 83,400 பாதிப்புகளைக் கொண்டுள்ளது. உலகளவில் உள்ள அனைத்து வாய் வழிப் புற்றுநோய்களில் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் புகையில்லா புகையிலைகளின் காரணமாக ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்புகளில் மிக அதிகப் பங்கினை கொண்டுள்ள பகுதியான தென்-மத்திய ஆசியாவில் (மொத்தம் 105,500 பாதிப்புகள்) இந்தியாவில் 83,400 பாதிப்புகள், வங்காள தேசத்தில் 9,700 பாதிப்புகள், பாகிஸ்தானில் 8,900 பாதிப்புகள் மற்றும் இலங்கையில் 1,300 பாதிப்புகள் உள்ளன.
  • அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மொத்தம் 3,900 பாதிப்புகளில், மியான்மரில் 1,600 பாதிப்புகள், இந்தோனேசியாவில் சுமார் 990 பாதிப்புகள் மற்றும் தாய்லாந்தில் 785 பாதிப்புகள் உள்ளன. கிழக்கு ஆசியாவில் உள்ள மொத்தம் 3,300 பாதிப்புகளில் சீனாவில் மட்டும் சுமார் 3,200 பாதிப்புகள் உள்ளன.