Published on Oct 10, 2024
Current Affairs
இந்தியாவில் யானைகளின் நிலை 2022-23
  • சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது, 'இந்தியாவில் யானைகளின் நிலை 2022-23' என்ற தலைப்பிலான அதன் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை நிலுவையில் வைத்து உள்ளது.
  • * இந்த வெளியிடப்படாத அறிக்கையின் தரவுகள் ஆனது கிழக்கு-மத்திய மற்றும் தெற்கு நிலப்பரப்புகளில் காணப்படும் யானைகளின் எண்ணிக்கையில் மிக அதிகப்படியான வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
  • * தெற்கு மேற்கு வங்காளம் (84%), ஜார்க்கண்ட் (64%), ஒடிசா (54%) மற்றும் கேரளாவில் (51%) யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு அளவானது குறிபிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. 2002 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு ஆனது "மொத்த நேரடி எண்ணிக்கை" முறையில் கணக்கிடப்பட்டன. 2002 ஆம் ஆண்டில் தென் மாநிலங்களில் "மறைமுக சாணக் கணக்கெடுப்பு முறை" அறிமுகப் படுத்தப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டில், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் ஒரு தொகுதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் சாணக் கணக்கெடுப்பு ஆகிய முறைகளை இணைத்து ஒரு கணக்கெடுப்பு நெறிமுறையைப் பயன்படுத்தின.