Published on Sep 24, 2024
Current Affairs
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல்
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல்
  •  இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான கோவிந்த் குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை 'ஒருமனதாக' ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிலைகளில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக சில அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஒரு தொடர் பரித்துரையினை அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற அந்தத் திட்டமானது இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களைப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்ற கோருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்தும் முறைக்கு மாறுவதற்கான முதல் அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் 'சிறப்பு பெரும்பான்மை' தேவையாகும்.
  • இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதாவானது அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களும் (நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு) ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் பட்ட 100 நாட்களுக்குள் நடைபெறுவதை உறுதி செய்யும். இதற்காக, நாட்டில் உள்ள மாநிலங்களில் பாதிக்கும் குறையாத மாநிலங்களின் சட்ட மன்றங்களால் இந்த சட்டத்திருத்தம் அங்கீகரிக்கப்பட வேண்டும் (ஒப்புக் கொள்ளப் பட வேண்டும்). "உள்ளாட்சி அரசு" ஆனது ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் கீழ் ஒரு கூறாக இருப்பதால், இந்த விவகாரத்தில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ளது.
  • கோவிந்த் குழுவால் முன்மொழியப்பட்ட இத்திட்டம் ஆனது, ஒரு மாநிலச் சட்டமன்றம் அல்லது மக்களவையானது அதன் 'முழு' ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் கலைக்கப் பட்டால், 'இடைக்கால' தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடுகிறது. ஆனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அல்லது மக்களவை ஆனது அடுத்த ஒரே நேரத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னதாக மீதமுள்ள பதவி காலத்திற்கு மட்டுமே செயல்படும். இடைக்காலத் தேர்தலுக்கும் திட்டமிடப்பட்ட ஒரே நேரத் தேர்தலுக்கும் இடையிலான இந்தக் காலகட்டம் ஆனது "காலாவதியாகாத காலம்" என்று அறியப்படும். இந்தியாவின் முதல் நான்கு பொதுத் தேர்தல்களின் போது (1951-52, 1957, 1962, 1967), வாக்காளர்கள் அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களுக்கும் வாக்களித்தனர். பின்னர், புதிய மாநிலங்களின் உருவாக்கம் மற்றும் பிற மாநிலங்களை மறு சீரமைப்பு செய்ததன் காரணமாக இந்தச் செயல்முறை முடிவுக்கு வந்தது.
  • 1968-89 ஆம் ஆண்டுகளில், சில (மாநில) சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதால், ஒரே தேசம் ஒரே நாடு (ONOE) நடைமுறை முற்றிலும் நிறுத்தப்பட வழிவகுத்தது.