Published on Aug 7, 2024
Current Affairs
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 2023
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 2023
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 18,378 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பதிவு செய்யப் பட்டு, அதில் 42 பெறுநர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைப் பெற்ற நிலையில் இதன் விளைவாக மொத்தம் 18,336 பெறுநர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
  • உறுப்பு தானம் பெற்றவர்களில் 30% பெண்கள் ஆவர்.
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் சுமார் 10% ஆனது வெளிநாட்டினருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையாகும்.
  • உறுப்பு தானம் பெற்ற 18,336 நபர்களில் 1,851 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
  • அதிக எண்ணிக்கையிலான இந்த உறுப்பு மாற்றுச் சிகிச்சை நடைமுறைகள் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட்டன.
  • NOTTO தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட 1,851 வெளிநாட்டு மாற்று அறுவை சிகிச்சை வழக்குகளில், ஒன்பது அறுவை சிகிச்சையில் மட்டுமே உயிரிழந்தவரிடமிருந்து உறுப்புகள் பெறப்பட்டன. டெல்லியில் அதிகபட்சமாக 1,445 அறுவை சிகிச்சைகளும், ராஜஸ்தானில் 116 அறுவை சிகிச்சைகளும், மேற்கு வங்காளத்தில் 88 அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப் பட்டுள்ளன.