Published on Oct 13, 2024
Current Affairs
இந்தியாவின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான கடன்
இந்தியாவின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான கடன்
  • சர்வதேச நிதிக் கழகம் (IFC) ஆனது இந்தியாவில் பசுமை நிதியளிப்பினை நன்கு மேம்படுத்துவது மற்றும் கடல் சார் சந்தையினை உருவாக்குவதற்காக என்று ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து 500 மில்லியன் டாலர் கடனை வழங்க உள்ளது. இது நாட்டில் IFC நிறுவனத்தின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான முதலீடு மற்றும்  இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மிகப்பெரியதொரு பசுமை நிதியுதவியைக் குறிக்கிறது. நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, பெருங்கடல்களில் நெகிழிக் குறைப்பு, நீடித்த வகையிலான சுற்றுலா, மற்றும் கடலோர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி போன்ற பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக கடல் சார் கடன்கள் வழங்கப் படுகின்றன.