Published on Nov 28, 2024
Current Affairs
இந்தியாவின் நாஃபித்ரோமைசின்
இந்தியாவின் நாஃபித்ரோமைசின்
  • நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்ட பல்வேறு தோற்றுருக்களை எதிர் கொள்வதற்காக வேண்டி, இந்தியா "நாஃபித்ரோமைசின்" எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட தனது முதல் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. இது "உயிரித் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சி உதவி சபையின்" (BIRAC) ஆதரவுடன் உருவாக்கப் பட்டது. 
  • இது "வோல்கார்ட்" எனப்படும் மருந்து நிறுவனம் மூலம் "மிக்னாஃப்" என்ற வர்த்தகப் பெயரில் சந்தைக்குக் கொண்டு வரப் பட்டுள்ளது.
  • நஃபித்ரோமைசின் அதன் வகுப்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலங்களில் உலகளவில் உருவாக்கப்பட்ட முதல் புதிய இவ்வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து என்ற வரலாற்றுச் சிறப்பைக் குறிக்கிறது.