Published on Dec 26, 2024
Current Affairs
இந்தியப் பிரதமரின் குவைத் பயணம்
இந்தியப் பிரதமரின் குவைத் பயணம்
  • 43 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இந்தியப் பிரதமர் குவைத் பயணம் மேற் கொண்டுள்ளார்.
  • அவர் 26வது அரேபிய வளைகுடா கோப்பையின் பெரும் தொடக்க விழாவில் 'கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு விசாம் முபாரக் அல்-கபீர் அல்லது ஆர்டர் ஆஃப் முபாரக் தி கிரேட் விருது வழங்கப்பட்டது.
  • இது அவருக்கு ஓர் உலக நாடு வழங்கிய 20வது சர்வதேச விருது ஆகும். இங்கிலாந்தின் இராணி இரண்டாம் எலிசபெத், முன்னாள் அமெரிக்க அதிபர்களான ஜார்ஜ் H.W. புஷ் மற்றும் பில் கிளிண்டன், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் பலர் இந்த விருதைப் பெற்றவர்கள் ஆவர்.
  • குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் சுமார் 21 சதவீதம் (1 மில்லியன்) மற்றும் அதன் பணியாளர்களில் 30 சதவீதம் (சுமார் 9 லட்சம்) பேர் இந்தியர்கள் ஆவர். குவைத் நாட்டின் உடனான இருதரப்பு வர்த்தகம் ஆனது 2023-24 ஆம் நிதியாண்டில் 10.47 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. * குவைத் நாடானது, நாட்டின் எரிசக்தி தேவையில் சுமார் 3% பூர்த்தி செய்வதுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய கச்சா எண்ணெய் வழங்கீட்டு நாடாக உள்ளது. குவைத் நாட்டிற்கான இந்திய ஏற்றுமதிகள் முதன்முறையாக 2 பில்லியன் டாலரை எட்டியது அதே நேரத்தில் இந்தியாவில் குவைத் முதலீட்டு ஆணையத்தின் முதலீடுகள் 10 பில்லியன் டாலர் மதிப்பினைத் தாண்டியது.
  • இதற்கு முன்னதாக 1981 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி குவைத் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.