நைஜீரியா நாடு தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (GCON) என்ற விருதினை வழங்கி இந்தியப் பிரதமரை கெளரவிக்க உள்ளது.
1969 ஆம் ஆண்டில் இந்த GCON விருது பெற்ற ஒரே வெளிநாட்டுப் பிரமுகர் எலிசபெத் மகாராணி ஆவார். தற்போதைய இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும் 17வது சர்வதேச விருது இதுவாகும்.
டொமினிகா காமன்வெல்த் நாட்டு அரசானது, அந்நாட்டின் உயரிய தேசிய விருதான டொமினிகா விருதினை இந்தியப் பிரதமருக்கு வழங்கி கெளரவிக்க உள்ளது. * இது கோவிட்-19 பெருந்தொற்றுகளின் போது டொமினிகாவிற்கு அவர் ஆற்றியப் பல பங்களிப்புகள் மற்றும் இந்தியாவிற்கும் டொமினிக்காவிற்கும் இடையிலான நட்புக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் ஆகும்.
டொமினிகா விருதானது இதற்கு முன்னர், கியூபாவின் தலைவரும் புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு வழங்கப்பட்டது. மேலும் டொமினிகாவின் ஒவ்வொரு அதிபருக்கும் இந்த மரியாதை வழங்கப்படுகிறது.