Published on Sep 10, 2024
Current Affairs
இணைய வெளிப் பாதுகாப்பு கொள்கை 2.0
இணைய வெளிப் பாதுகாப்பு கொள்கை 2.0

தமிழக அரசானது சமீபத்தில் இணையவெளிப் பாதுகாப்புக் கொள்கை 2.0யினை வெளியிட்டுள்ளது.

* இது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு இணைய வெளிப் பாதுகாப்புக் கொள்கை 2020யினை மாற்றியமைத்துள்ளது.

இணையவெளி அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களின் ஆய்வு, இணக்கம் மற்றும் கண்காணிப்புக்கான வழிகாட்டுதல்கள், சீர்தர இயக்கச் செயல்முறைகள் (SOP) மூலம் அரசாங்கச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இது பட்டியலிடுகிறது.

இக்கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் சார் சொத்துக்களை (உள்கட்டமைப்பு, மென்பொருள், குடிமக்கள் சேவைகள்) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் அவற்றின் கிடைக்கும் தன்மையை அதிகப் படுத்துவதோடு, நிறுவப்பட்ட உள்கட்டமைப்பைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒரு நிறுவனம் சார்ந்த நெறிமுறையை உருவாக்கும்.