Published on Nov 3, 2024
Current Affairs
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை
ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை
  • * மத்திய அரசானது, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் அரசாங்கத்தின் முதன்மையான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் கிடைக்கப் பெறும் வகையில் அந்தத் திட்டத்தின் பயனாளர் வரம்பினை விரிவுபடுத்தியுள்ளது. 
  •  இந்த முதியோர்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை வழங்கப்படும். அவர்களின் நிதி நிலை அல்லது வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இந்த விரிவாக்கப்பட்டத் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும்.
  • ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை ஆனது, ஏழ்மை நிலையில் உள்ளவரோ அல்லது நடுத்தர வர்க்கத்தினரோ அல்லது மேல்நிலை வர்க்கத்தினரோ என எந்தவித வருமான வரம்புமின்றி அனைவருக்குமானதாகும். PMJAY என்ற திட்டமானது, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆகிய மருத்துவ சிகிச்சைகளுக்கு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான சுகாதாரக் காப்பீட்டினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் மக்கள்தொகையில் 40% பங்கினை கொண்ட அடிமட்ட நிலையில் உள்ள 12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 கோடி பயனாளிகளை இது உள்ளடக்கி உள்ளது.