Published on Dec 10, 2024
Current Affairs
ஆபத்சஹாயேஸ்வரர் கோவில்
ஆபத்சஹாயேஸ்வரர் கோவில்
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துக்காட்சி எனுமிடத்தில் உள்ள சுமார் 1,300 ஆண்டுகள் மிகவும் பழமையான ஆபத்சகாயேஸ்வரர் கோயில், யுனெஸ்கோ அமைப்பின் 2023 ஆம் ஆண்டு சிறப்பு விருதினைப் பெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • விக்ரம சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் ஆகியோரால் கட்டப்பட்டதாக நம்பப் படும் இந்த கோவிலில் முன்பு ஐந்து பிரகாரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஊர் ஆனது விக்ரம சோழீஸ்வரம் என்றும் குலோத்துங்க சோழ நல்லூர் என்றும் அழைக்கப் பட்டது. சரபேஸ்வரருக்கு முதன்முதலில் சிலையை நிறுவியவர் குலோத்துங்க மன்னராவார், அதனால்தான் இந்த தெய்வம் ஆதி சரபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
  • சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலான கோவில்களைப் புனரமைக்கவும் புதுப்பிக்கவும் தமிழக அரசு ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.