Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on May 26, 2024
Current Affairs
ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பின் உலகளாவிய நகரங்களின் குறியீடு 2024
ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பின் உலகளாவிய நகரங்களின் குறியீடு 2024
  • ஆக்ஸ்போர்டு குறியீட்டுப் பட்டியலில் நியூயார்க் முதலிடத்திலும், இலண்டன், சான் ஜோஸ், டோக்கியோ மற்றும் ஜப்பான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • இந்தக் குறியீட்டின் முதல் 50 இடங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நகரங்கள் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன.
  • இந்தக் குறியீட்டில் இந்திய நகரங்களில் டெல்லி முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
  • தேசியத் தலைநகரம் ஆனது, உலகளாவியப் பட்டியலில் 350வது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை உட்பட பல இந்திய நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
  • இருப்பினும், எந்த ஒரு இந்திய நகரமும் முதல் 300 இடங்களுக்குள் இடம் பெறவில்லை. இந்தியாவில் பெங்களூரு 411, மும்பை 427, சென்னை 472, கொச்சி 521, கொல்கத்தா 528, புனே 534, திருச்சூர் 550, ஹைதராபாத் 564 மற்றும் கோழிக்கோடு 580 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • திருச்சிராப்பள்ளி (634), கோயம்புத்தூர் (669), மதுரை (691), வேலூர் (729) மற்றும் சேலம் (767) தமிழகத்திலிருந்து இடம் பெற்றுள்ள நகரங்கள் ஆகும்.