Published on Sep 4, 2024
Current Affairs
அஸ்னா புயல்
அஸ்னா புயல்
  • குஜராத்தின் கட்ச் கடற்கரை மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் அஸ்னா புயல் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நிலத்தில் தோன்றிய இந்த அரிய சூறாவளியான இது அரபிக்கடலை நோக்கிச் செல்கிறது.
  • இது 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் அரபிக்கடலில் உருவான முதல் சூறாவளிப் புயலாகும்.
  • அங்கீகரிக்கப்பட வேண்டியவர் அல்லது போற்றப்பட வேண்டியவர்" என்று பொருள் படும், அஸ்னா எனும் இப்பெயரானது பாகிஸ்தானால் வழங்கப்பட்டது.
  • 1891 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், ஆகஸ்ட் மாதம் (1976, 1964 மற்றும் 1944 ஆம் ஆண்டில்) மட்டும் அரபிக்கடலில் மூன்று சூறாவளி புயல்கள் மட்டுமே உருவாகின.