Published on Jun 19, 2024
Current Affairs
அல்சைமர் நோய்க்கான புதிய மருந்து
அல்சைமர் நோய்க்கான புதிய மருந்து
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் (FDA) சுயாதீன ஆலோசகர்கள் குழுவானது டோனனெமாப் என்ற ஒரு புதிய அல்சைமர் மருந்திற்கு ஒப்புதல் அளித்து உள்ளது. டோனனெமாப் என்பது மூளையில் உள்ள அமிலாய்டு பீட்டா புரதப் படலங்களை குறி வைக்கின்ற ஓர் ஓரின நகல் நோய் எதிர்ப்பொருள் (மோனோக்ளோனல் ஆன்டிபாடி) ஆகும்.
  • இச்சிகிச்சையானது நோயின் முன்னேற்றத்தைக் குறைத்தாலும், அது முழுவதுமாக நோயினைக் குணப்படுத்துவதில்லை.
  • பல வகை அல்சைமர் நோய்கள் உள்ளதால், அவற்றிற்கு என்று பல்வேறு சிகிச்சைகள் தேவைப்படும்.