Published on Dec 8, 2024
Current Affairs
அர்ஜுன் வாஜ்பாய்
அர்ஜுன் வாஜ்பாய்
  • அர்ஜுன் வாஜ்பாய், சுமார் 8,000 மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் 8வதாக ஷிஷாபங்மா மலையில் (திபெத்தில் உள்ளது) ஏறி சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • இந்த மலையில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையை இது குறிக்கிறது. மலை அடிவார முகாமில் இருந்து 72 மணி நேரத்திற்குள் மலை உச்சியினை வேகமாக அடைந்த சாதனையும் இதில் அடங்கும். எவரெஸ்ட் (2010) மற்றும் லோட்சே (2011) ஆகிய சிகரத்தில் ஏறிய இளம் நபர் என்ற ஒரு பெருமையினையும் இவர் கொண்டுள்ளார்.
  • அவர் தற்போது பூமியில் உள்ள 14 உயரமான மலைகளில் 8 மலைகளின் உச்சியை அடைந்துள்ளார். 8,000 மீட்டர் உயரம் கொண்ட எட்டு சிகரங்களில் ஏறிய முதல் இந்தியர் என்ற ஒரு பெருமையினையும் இவர் கொண்டுள்ளார்.