Published on Nov 6, 2024
Current Affairs
அமூரில் பெருங்கற்கால புதைவிடம்
அமூரில் பெருங்கற்கால புதைவிடம்
  • சென்னை வட்ட இந்தியத் தொல்லியல் துறை (ASI) ஆனது, அமூரில் அகழாய்வுப்பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
  • இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அருகே கீழைப் பாலாற்றின் படுகையின் கரையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டத் தளமாகும்.
  • * ASI ஆனது, 1921 ஆம் ஆண்டில், கீழைப் பாலாறு படுக்கையில் உள்ள அமூர் கிராமத்தில் அமைந்துள்ள 130 ஏக்கர் நிலத்தில் கல் பதுக்கைகள் மற்றும் கற்குவியல்களைக் கொண்ட ஒரு பெருங்கற்காலப் புதைவிடத்தினைக் கண்டறிந்துள்ளது. இந்தப் பண்டைய கால புதைவிடம் ஆனது, 2000 ஆண்டுகள் பழமையானது என கருதப் படுகிறது.
  • 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் சிறுதாவூரில் 2007 ஆம் ஆண்டில் பெருங்கற்கால கல் சவப்பெட்டி, இரும்புப் பொருள்கள் மற்றும் செந்நிற சூதுபவள மணிகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.