Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Nov 9, 2024
Current Affairs
அமெரிக்காவின் 47வது அதிபர்
அமெரிக்காவின் 47வது அதிபர்
  • அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸை வீழ்த்தி அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் J. டிரம்ப் பதவியேற்றார்.
  • 1884 மற்றும் 1892 ஆம் ஆண்டுகளில் அதிபரான க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் பிறகு, வெள்ளை மாளிகையில் ஒரு அதிபர் தொடர்ச்சியாக இல்லாமல் இரண்டு முறை பதவி வகிப்பது இது இரண்டாவது முறையாகும். அமெரிக்கா நாடானது வாக்காளர் குழு என்ற ஒரு முறையைப் பின்பற்றுகிறது. * மக்கள் தொகையின் அடிப்படையில், இந்த வாக்காளர் குழுவானது மாகாணங்களுக்கு தனது வாக்குகளை ஒதுக்குகின்றன.மொத்தம் 538 தேர்தல் வாக்காளர் குழு வாக்குகள் உள்ளன; 435 பிரதிநிதிகள் சபை, 100 பேரவை இடங்கள் மற்றும் வாஷிங்டன் DC மாகாணத்தில் 3 இடங்கள். முதலாவதாக, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் மாகாணங்களில் சாத்தியமான வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
  • பின்னர், ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பொதுமக்கள் பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பதன் மூலம் தங்கள் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • எனவே, பொதுமக்கள் உண்மையில் ஒரு வாக்காளர்களை தேர்ந்தெடுக்கிறார்களே தவிர, பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது நேரடியாக அதிபரைத் தேர்ந்தேடுக்க வில்லை. அதிபர் தேர்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளருக்கு குறைந்தது 270 வாக்காளர்களின் வாக்குகள் தேவை. அமெரிக்க அரசியலமைப்பின் படி, ஒரு வேட்பாளர், அதிபர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவதற்கு, நாட்டில் இயற்கையாகப் பிறந்த குடிமகனாகவும், 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். J.D.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • புதிய அதிபரின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்குகிறது என்ற நிலையில் இந்த தேதியானது பதவியேற்பு நாளுமாகும்.