Published on Dec 19, 2024
Current Affairs
அமெரிக்காவின் பிறப்புரிமை சார் குடியுரிமை
அமெரிக்காவின் பிறப்புரிமை சார் குடியுரிமை
  •  அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் பிறப்புரிமை சார் குடியுரிமையை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
  •  பிறப்புரிமை சார் குடியுரிமைக்கு, அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
  •  பிறப்புரிமை சார் குடியுரிமை என்பதற்கு அமெரிக்க நாட்டின் எல்லைக்குள் பிறந்த எவரும் தானாகவே அமெரிக்காவின் குடியுரிமை பெறுகிறார்கள் என்று பொருளாகும். சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகள், குறுகிய கால நுழைவு இசைவுச் சீட்டு மூலம் அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆவணமற்றக் குடியேற்ற வாசிகளின் குழந்தைகள் இதில் அடங்குவர்.
  • அரசியலமைப்பில் ஏதேனும் மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு, நிர்வாகத்திற்கு காங்கிரஸின் இரு அவைகளிலும் - பேரவை மற்றும் பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. கூடுதலாக, இது அனைத்து மாகாணச் சட்டமன்றங்களில் நான்கில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • 2019 ஆம் ஆண்டில், புலம்பெயர்வு கொள்கை நிறுவனம் ஆனது 2019 ஆம் ஆண்டில் 18 வயதிற்குட்பட்ட 5.5 மில்லியன் குழந்தைகள் அந்நாட்டில் குறைந்தபட்சம் அவர்தம் பெற்றோரில் ஒருவராவது சட்டவிரோதமான முறையில் வாழ்ந்ததாக மதிப்பிட்டுள்ளது என்பதோடு இது அமெரிக்க குழந்தை மக்கள் தொகையில் 7% ஆகும்.