- சான் பிரான்சிஸ்கோவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய ஆராய்ச்சியானது, நிறுவனங்களின் அதிக இலாபம் ஈட்டும் மனப்பான்மையினால் ஏற்படும் பணவீக்கம் குறித்த கோட்பாடு பற்றிய புதிய கண்ணோட்டத்தினை எழுப்பியுள்ளது.
- தொழில்முனைவோருக்கு தொழில் தொடங்க ஊக்கமளிக்கின்றது என்பதால், சில சமத்துவமின்மை நிலை உண்மையில் பயனளிக்கின்றது.
- நிறுவனங்களின் அதிக இலாபம் ஈட்டும் மனப்பான்மையினால் ஏற்படும் பணவீக்கம் என்பது உற்பத்திச் செலவினம், தேவை அல்லது கூலி ஆகியவற்றின் அதிகரிப்பைக் காட்டிலும் இலாபம் ஈட்ட பெருநிறுவனங்கள் எண்ணுவதால் ஏற்படுகின்ற ஒரு பொருளாதாரத்தின் பணவீக்க நிலையைக் குறிக்கிறது.
- பணவீக்கம் என்பது ஒரு பொருளாதாரத்தில் சரக்குகள் மற்றும் சேவைகளின் பொது விலை அளவு உயரும் வீதமாகும்.
- பெருநிறுவனங்கள் அவற்றின் உண்மையான உள்ளீட்டு செலவு அதிகரிப்பை விடவும் அதிகமாகப் பொருட்களின் விலைகளை உயர்த்தி தற்போதுள்ள பணவீக்கத்தைப் பயன்படுத்தி இலாபம் ஈட்ட முயல்வது அதி இலாப விருப்பம் ஆகும்.