Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Nov 21, 2024
Current Affairs
அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தை
அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தை
  • மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) ஆனது 2023-24 ஆம் ஆண்டு இந்தியாவில் குறுகிய கால மின்சாரச் சந்தை குறித்த அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  •  CERC ஆனது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தையினை (HP-DAM) அறிமுகப்படுத்த தனது ஒப்புதலை அளித்தது. தற்போதுள்ள விலை உச்ச வரம்பு மீதான ஒரு காரணமாக பிந்தைய நாள் மதிப்பின் *
  •  அடிப்படையிலான சந்தையில் பங்கேற்க முடியாத மிகவும் அதிக விலை உருவாக்கத் துறைகளுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட சந்தைப் பிரிவு ஆனது அறிமுகப் படுத்தப் பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) ஆனது, மின் பரிமாற்றங்களில் அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தையிலிருந்து மின்சாரத்தை அதிகம் வாங்கும் நிறுவனமாக இருந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்திய எரிசக்தி சந்தையில் அதிக விலையிலான பிந்தைய நாள் மதிப்பு அடிப்படையிலான சந்தை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட மொத்த அளவு சுமார் 32.07 மில்லியன் அலகுகள் (MU) ஆகும். இதில் TANGEDCO நிறுவனத்தின் பங்கு 20.98 MU அல்லது 65.43% ஆகும்.
  • இந்த அறிக்கையின்படி, TANGEDCO நிறுவனத்தின் சராசரி கொள்முதல் சக்தியானது ஓர் அலகுக்கு 17.65 ரூபாயாக இருந்தது. மாநிலத்தின் மின்சாரத் தேவையானது மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகாவாட் என்ற வரலாறு காணாத வகையில் புதிய சாதனையை எட்டியது.
  • ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தினசரி நுகர்வு 454.32 MU என்ற புதிய உச்சத்தை எட்டியது.