நிதி ஆயோக் அமைப்பின் கீழ் இயங்கும் அடல் புத்தாக்கத் திட்டத்தின் (AIM) முதன்மை முன்னெடுப்பினை 2028 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.AIM 2.0 ஆனது, இந்தியாவின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் சூழலை நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, இது உலக அளவில் போட்டி மற்றும் புத்தாக்கம் சார்ந்த பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இந்திய நாட்டின் இலக்கை முன்னெடுத்து செல்கிறது.
இந்தியாவானது தற்போது உலகளாவியப் புத்தாக்கக் குறியீட்டில் 39வது இடத்தில் உள்ளதோடு, உலகின் மூன்றாவது பெரியப் புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது.