Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Oct 9, 2024
Current Affairs
அசாமின் பாரம்பரியத் தயாரிப்புகள் - புவிசார் குறியீடு
அசாமின் பாரம்பரியத் தயாரிப்புகள் - புவிசார் குறியீடு
  • பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் பல தனித்துவமான அரிசித் தேறல் உட்பட அசாம் பகுதியினைச் சேர்ந்த பின்வரும் எட்டு தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப் படுகிறது.
  •  முதலாவது தயாரிப்பு ஆனது அரிசித் தேறல் வகையான 'போடோ ஜூ க்வ்ரான்' என்ற பொருளில் அதிக சதவீத ஆல்கஹால் (சுமார் 16.11%) உள்ளது.
  •  இரண்டாவது வகையானது 'மைப்ரா ஜூ பித்வி' ஆகும் என்ற நிலைமையில் இது உள் நாட்டில் 'மைப்ரா ஜ்வு பித்வி' அல்லது 'மைப்ரா ஸ்வு பித்வி' என்று அழைக்கப்படுகிறது. போடோ ஜூ கிஷி' எனப்படும் மூன்றாவது வகையும் மிகவும் பாரம்பரியமாக புளிக்க வைக்கப் பட்ட அரிசியிலிருந்து பெறப்படும் மதுபானமாகும்.
  •  முக்கியமான மற்றும் விரும்பத்தகு உணவான 'போடோ நாபம்' எனப்படும் புளித்த மீன் உணவு வகைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  •  'போடோ ஒன்ட்லா' எனப்படும் மற்றொரு உணவு வகையானது, பூண்டு, இஞ்சி, உப்பு மற்றும் காரத்துடன் கூடிய அரிசித் தூள் மணமுடன் கூடிய ஒரு குழம்பு வகையாகும்.
  • 'போடோ குவ்கா' உணவு வகையும் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது. சணல் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பகுதியளவு புளித்த உணவான 'போடோ நர்சி' என்ற உணவு வகையும் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  •  'போடோ அரோனை' என்ற சிறிய, அழகான துணியும் புவி சார் குறியீட்டினைப் பெற்று உள்ளது.