Published on Jul 13, 2024
Current Affairs
அசாதாரணமான அயனிமண்டல வடிவங்கள்
அசாதாரணமான அயனிமண்டல வடிவங்கள்
  • நாசாவின் GOLD செயற்கைக் கோளானது வியக்கத்தக்க X- மற்றும் C- வடிவ ரீதியிலான வடிவங்களைக் கண்டறிந்துள்ளது.
  • இந்த வடிவங்கள் பொதுவாக புவிக் காந்த இடையூறுகளின் போது ஏற்படுகின்றன என்ற நிலையில் புவிக் காந்த இடையூறுகள் இல்லாத நிலையிலும் கூட இவை தோன்றுவது நிபுணர்களை குழப்பத்தில் ஆழத்தியுள்ளது.
  • பூமியின் அயனி மண்டலம் என்பது நீண்ட தூர அளவிலான ரேடியோ பரிமாற்றத்திற்கு அவசியமான மின்னூட்டம் பெற்ற வாயுவின் அடுக்கு ஆகும்.GOLD என்பது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்ட, வெப்ப நிலை மற்றும் அயனி மண்டல அடர்த்தியை அளவிடுவதற்காக என்று மேற்கு அரைக் கோளத்தில் சுற்றி வருகின்ற ஒரு செயற்கைக்கோள் ஆகும்.