- இரத்தினம் மற்றும் நகைத் துறைக்கு அங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரச் சேவை வழங்குநர் (AEO) அந்தஸ்தை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
- இரத்தினம் மற்றும் நகைத் துறை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை (GJEPC) என்பது இந்தத் துறையின் உயர் நிலை அமைப்பாகும்.
- AEO என்பது உலகளாவிய வர்த்தகத்தைப் பாதுகாக்கப்பதற்கும் எளிதாக்கச் செய்வதற்குமான உலக சுங்க அமைப்பின் (WCO) SAFE தரநிலைக் கட்டமைப்பின் கீழ் ஒரு திட்டமாகும்.
- சர்வதேச விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பை மேம்படுத்துவதும், சட்டப்பூர்வமான பொருட்களின் வர்த்தகத்தினை எளிதாக்குவதும் இதன் நோக்கமாகும்.