Posts

Current Affairs

TDP1 நொதிகள்

கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மேம்பாட்டு சங்கத்தின் (IACS) அறிவியல் ஆய்வாளர்கள், டைரோசில்-DNA பாஸ்போடையீஸ்ட்டிரேஸ் 1 (TDP1) எனப்படும் டிஎன்ஏ மறுசீரமைப்பு நொதியைத் தூண்டுவிப்பதன் மூலம் ஒரு புதிய சிகிச்சை முறையினை அடையாளம் கண்டுள்ளனர். * தற்போது பயன்பாட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான கேம்ப்டோதெசின், டோபோடோகன் மற்றும் இரினோடெகன் ஆகியவை டோபோயிசோமரேஸ் 1 (Top1) என்ற நொதியைத் தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. புற்றுநோய் செல்கள் ஆனது பெரும்பாலும் இந்த மருந்துகளுக்கு பெரும் எதிர்ப்பை உருவாக்குவதால், முன்னணி ஆராய்ச்சியாளர்கள் சில மாற்று சிகிச்சை உத்திகளைக் கண்டறிய இது வழி வகுக்கிறது. TDP1 நொதியினைத் தூண்டுவதன் மூலமான Top1 நொதியை இலக்காகக் கொண்ட கீமோதெரபி சிகிச்சையில் இருந்து தப்பும் புற்றுநோய் செல்கள் உயிரணுப் பிரிகையின் போது சேதமடைந்த டிஎன்ஏவை சரி செய்ய உதவும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இந்த செயல்முறையானது புற்றுநோய் செல்கள் கீமோதெரபி சிகிச்சையின் சில விளைவுகளை எதிர்க்கவும், தொடர்ந்து பெருகவும் வழி வகுக்கிறது.

Current Affairs

TDP1 enzyme

❖ The Scientists from the Indian Association for the Cultivation of Science (IACS), Kolkata, have identified a new therapeutic target by activating a DNA repair enzyme called Tyrosyl-DNA phosphodiesterase 1 (TDP1). ❖ Current anticancer drugs like Camptothecin, Topotecan, and Irinotecan focus on inhibiting the enzyme Topoisomerase 1 (Top1). ❖ Cancer cells often develop resistance to these drugs, leading the researchers to explore alternative treatment strategies. ❖ The researchers have discovered that cancer cells can survive Top1-targeted chemotherapy by activating TDP1, which helps repair damaged DNA during cell division. ❖ This process allows the cancer cells to counteract the effects of chemotherapy and continue proliferating.

Current Affairs

பாலினத்திற்கு ஏற்றப் பருவநிலைக் கொள்கைகள்

உலகளவில் பாலினத்திற்கு ஏற்ற பருவநிலை கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. பாரீஸ் உடன்படிக்கையின் 81 சதவீத ஒப்பந்தத் தரப்பினர் அவற்றின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDC) பாலினம் சார்ந்த பல நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளனர். இன்று வரை, 195 ஒப்பந்ததாரர்களின் மொத்த NDC பங்களிப்புகளின் எண்ணிக்கை 168 ஆக இருந்தது. * 62.3 சதவீத நாடுகள் அனைத்துப் பருவநிலை நடவடிக்கைகளிலும் பாலினத்தினைக் கருத்தில் கொள்வதை நெறிப்படுத்துவதற்கான நிறுவனம் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன் வைத்துள்ளன. * 11.5 சதவீத நாடுகள், தகவமைப்பு நடவடிக்கையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை ஆதரிப்பதில் ஈடுபட்டுள்ள பாலினச் சமச்சீர் குழுக்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்புகளை முன் வைத்துள்ளன. சுமார் 55.7 சதவீத நாடுகள் பாலினச் சமத்துவத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன. பிராந்தியத்தைப் பொறுத்து, வளர்ந்து வரும் நாடுகளின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகள் தற்போது 45-80 சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளில் பெண் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Current Affairs

Gender-Responsive Climate Policies

❖ There has been a rise in gender-responsive climate policies and actions globally. ❖ Around 81 per cent of the Parties to the Paris Agreement referred to gender in their Nationally Determined Contributions (NDC). ❖ Till that date, the total number of NDCs of 195 Parties was 168. ❖ 62.3 per cent described efforts to strengthen institutional mechanisms for mainstreaming gender considerations across climate action. ❖ Some 11.5 per cent described initiatives aimed at increasing the gender balanced groups engaged to support monitoring and evaluation of adaptation action. ❖ Around 55.7 per cent affirmed their commitment to gender equality. ❖ Women farmers currently account for 45-80 per cent of all food production in developing countries depending on the region. ❖ About two-thirds of the female labour force in developing countries and more than 90 per cent in many African countries are engaged in agricultural work.

Current Affairs

2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான மின் தேவை

2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது 6.2% அதிகரித்து 68,967 மில்லியன் அலகுகளாக (MU) உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த மின் தேவையானது 64,958 MU ஆக இருந்தது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில், மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவையானது 20,784 மெகாவாட்டாக இருந்தது என்ற நிலையில் இது கடந்த ஆண்டில் இதன் ஒப்பிடக் கூடிய காலகட்டத்தில் 19,045 மெகாவாட்டாக இருந்தது. இந்தியாவில் உள்ள மொத்தத் தொழிற்சாலைகளில், 15.66 சதவீதப் பங்குடன் (2,53,334) தமிழகம் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் கோடைப் பருவத்தில், மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகாவாட் என்ற எப்போதும் இல்லாத அளவினை எட்டிய மாநிலத்தின் மின் தேவையானது ஒரு புதிய சாதனை அளவினை எட்டியது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தினசரி நுகர்வு அளவானது 454.32 MU என்ற புதிய உச்சத்தை எட்டியது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த நிறுவப் பட்ட மின் உற்பத்தி திறன் 41, 126.68 மெகாவாட் ஆகும்.

Current Affairs

Power demand in first half 2024-25

❖ Tamil Nadu’s power demand increased 6.2% to 68,967 million units (MU) in the first half of the financial year 2024-25. ❖ It was 64,958 MU in the same period last year. ❖ During the April-September period in 2024, the State saw a peak power demand of 20,784 MW as against 19,045 MW in the comparable period last year. ❖ The State has the highest number of factories, accounting for 15.66% of the total number of factories in India (2,53,334). ❖ During summer this year, the State’s power demand hit a new record, touching an all-time-high of 20,830 MW on May 2. ❖ The daily consumption hit a new high of 454.32 MU on April 30. ❖ Tamil Nadu’s total installed power capacity was 41,126.68 MW, as on September 30, 2024.

Current Affairs

மூளையின் முதல் முழுமையான வரைபடம்

நடக்கும் மற்றும் பார்க்கும் திறன் கொண்ட ஒரு விலங்கான, நன்கு வளர்ச்சியடைந்த ஈயின் மூளையில் உள்ள அனைத்து 139,255 நியூரான்களின் முதல் முழுமையான பிணைப்புகளின் வரைபடத்தினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். முந்தைய ஆய்வுகள் ஆனது 3,016 நியூரான்களுடன் கூடிய பழ ஈ லார்வா அல்லது 302 நியூரான்களைக் கொண்ட நூற்புழு புழு போன்றவற்றின் சிறிய மூளை அமைப்புகளை வரைபடமாக்கியுள்ளன. பழ ஈக்களில் சுமார் 140,000 நியூரான்கள் உள்ளன என்ற ஒரு நிலையில் இது மனித மூளையில் உள்ள 86 பில்லியனுடன் ஒப்பிடும் போது ஒரு சிறிய எண்ணிக்கையாகும்.

Current Affairs

First complete map of brain

❖ Researchers released the first complete wiring diagram of all 139,255 neurons in an adult fly brain — an animal capable of both walking and seeing. ❖ Previous studies have mapped smaller brain systems like fruit fly larva with 3,016 neurons, or the nematode worm with 302 neurons. ❖ Fruit flies have about 140,000 neurons, which is a tiny number compared to the 86 billion in the human brain.

Current Affairs

இந்தியாவில் வாய் புற்றுநோய்ப் பாதிப்பு

தெற்காசியாவில் புகையற்ற புகையிலை (மெல்லுதல், உறிஞ்சுதல் அல்லது முகர்தல்) மற்றும் பாக்கு (வெற்றிலைப் பாக்கு என்றும் அழைக்கப்படுகிறது) ஆகியவற்றினால் ஏற்படும் வாய்வழிப் புற்றுநோய்களின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 1,20,200 பாதிப்புகளில் சுமார் 83,400 பாதிப்புகளைக் கொண்டுள்ளது. உலகளவில் உள்ள அனைத்து வாய் வழிப் புற்றுநோய்களில் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் புகையில்லா புகையிலைகளின் காரணமாக ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்புகளில் மிக அதிகப் பங்கினை கொண்டுள்ள பகுதியான தென்-மத்திய ஆசியாவில் (மொத்தம் 105,500 பாதிப்புகள்) இந்தியாவில் 83,400 பாதிப்புகள், வங்காள தேசத்தில் 9,700 பாதிப்புகள், பாகிஸ்தானில் 8,900 பாதிப்புகள் மற்றும் இலங்கையில் 1,300 பாதிப்புகள் உள்ளன. அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மொத்தம் 3,900 பாதிப்புகளில், மியான்மரில் 1,600 பாதிப்புகள், இந்தோனேசியாவில் சுமார் 990 பாதிப்புகள் மற்றும் தாய்லாந்தில் 785 பாதிப்புகள் உள்ளன. கிழக்கு ஆசியாவில் உள்ள மொத்தம் 3,300 பாதிப்புகளில் சீனாவில் மட்டும் சுமார் 3,200 பாதிப்புகள் உள்ளன.

Current Affairs

Oral cancer in India

❖ India has the largest number of oral cancer cases caused by smokeless tobacco (chewed, sucked on or sniffed) and areca nut (also called betel nut) use in South Asia. ❖ It was hosting up 83,400 of the 120,200 cases globally in 2022. ❖ Smokeless tobacco accounts for over 30 per cent of all oral cancer cases globally. ❖ The contributing regions of South-Central Asia (a total of 105,500 cases) are, with 83,400 - India, 9,700 - Bangladesh, 8,900 - Pakistan and in Sri Lanka 1,300). ❖ It is followed by South-East Asia (a total of 3,900 cases, with 1,600 in Myanmar, 990 in Indonesia, and 785 in Thailand). ❖ The East Asia hosts a total of 3,300 cases, with 3,200 in China.