Recent Posts

View all
Dec 29, 2024 Current Affairs

திபெத் வழியே பாயும் பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய அணையினைக் கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது புவியின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாகக் கூறப்படுகிறது. இந்த நீர்மின் நிலையம் ஆனது, பிரம்மபுத்திரா நதியின் திபெத்திய பெயரான யார்லுங் சாங்போ ஆற்றின் நீர் போக்கின் கீழ் மட்டப் பகுதியில் அமைக்கப் படுவதற்கு என திட்டமிடப் பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் திபெத்தில் 1.5 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்ட ஜாம் நீர்மின் நிலையத்தினை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. பிரம்மபுத்திரா நதியானது, திபெத்தியப் பீடபூமியின் குறுக்கே பாய்கிறது என்ற ஒரு நிலையில் பூமியின் மிக ஆழமான பள்ளத்தாக்கை உருவாக்குகின்ற இந்த நதியானது இந்தியாவை அடைவதற்கு முன்னதாக 25,154 அடி வரையிலான ஆழ வித்தியாசத்தைக் கொண்டுள்ளது.

Dec 29, 2024 Current Affairs

❖ China has approved the construction of the world's largest dam, costing $137 billion, on the Brahmaputra River in Tibet. ❖ This is stated to be the planet's biggest infra project. ❖ This hydropower project is planned in the lower reaches of the Yarlung Zangbo River, the Tibetan name for the Brahmaputra. ❖ China has already Operationalised the $1.5 billion Zam Hydropower Station, the largest in Tibet in 2015. ❖ The Brahmaputra River flows across the Tibetan Plateau, carving out the deepest canyon on Earth and covering a staggering vertical difference of 25,154 feet before reaching India.

Dec 29, 2024 Current Affairs

ஆளுகை மற்றும் திட்ட அமலாக்கத்தினை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்பத்தைப் செயல்படுத்துகின்ற 45வது PRAGATI கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார். ஆறு மெட்ரோ நகரங்களில் மேற்கொள்ளப்படும் சில முன்னெடுப்புகள் மற்றும் சாலை இணைப்பு மற்றும் அனல் மின்சாரம் ஆகியவற்றிற்கு தலா ஒரு திட்டம் என மொத்தம் எட்டு திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. PRAGATI என்பது முனைப்பு மிக்க ஆளுகை மற்றும் சரியான நேரத்திலான அமலாக்கம் என்பதைக் குறிக்கிறது. பொறுப்புக் கூறல் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்த தளம் ஊக்குவிக்கிறது.